செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொதுச்சேவைக்கு குந்தகம் விளைவிப்பது தகுமா? கிளிநொச்சியில் என்ன நடக்கின்றது?

பொதுச்சேவைக்கு குந்தகம் விளைவிப்பது தகுமா? கிளிநொச்சியில் என்ன நடக்கின்றது?

1 minutes read

போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிப் பிரதேசம் இப்போதுதான் புனர் உருப்பெற்று வருகின்றது. குறிப்பாக மருத்துவச் சேவை என்பது தொடர்ந்தும் அடிப்படையாக தேவைப்படுகின்ற பகுதியாக வன்னிப் பிரதேசம் காணப்படுகிறது.

அண்மையில் கிளிநொச்சியில் கண்டாவளை வைத்தியப் பிரதேசத்தில் நடக்கும் சம்பவங்களானது அரச பொதுச்சேவைக்கு ஏற்பட்டுள்ள துரதிஷ்டமான நிலையாகும். இதனால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றதா என சிந்திக்கவேண்டியுள்ளது.

இதில் முதலில் அரச பொதுச்சேவைக்கு குந்தகம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியதை நாம் வலியுறுத்த வேண்டும். ஒரு பொதுச் சேவை அதிகாரியை தொலைபேசியில் மிரட்டியமை ஏற்புடையதல்ல. இது எந்த பொதுச் சேவை பணியாளர்களுக்கு நடந்தாலும் குற்றமே. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டுமென்றால் முளையிலே களையப்பட வேண்டும்.

எந்தவொரு அரச சேவையும் மக்களின் அடிப்படைத் தேவைக்காக ஏற்பாடு செய்யப்படுவதுடன் அது மக்களின் அடிப்படை உரிமையும் மக்களின் வரிப் பணத்தினால் இடம்பெறும் சேவையுமாகும். அதில் அரசியல் தலையீடோ தனிப்பட்ட விருப்புவெறுப்போ குறுக்கிடக்கூடாது.

அதேபோன்று அரச பணியில் இருப்பவர்கள் அதன் வரைமுறைகளையும் சட்ட ரீதியாக சுற்று நிரூபங்களுக்கு அமையவும் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும்.

அதனை மீறுவதும் பணியை துஸ்பிரயோகம் செய்வதாகவே அமையும். இந்த பொறுப்பு அனைத்து மக்களுக்கான பொதுச் சேவைப் பணி அலுவலர்களுக்கும் பொருந்தும் என்றே மூத்த அரச சேவையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

போரால் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் கிளிநொச்சி மண்ணின் எதிர்கால வளர்ச்சி மற்றும் வெற்றிகளுக்கு அனைவரும் பொறுப்புடன் இயங்க வேண்டும். கிளிநொச்சி வளர்ச்சியடைய வேண்டும் என்பதையே மக்கள் வலியுறுத்தி நிற்கின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.