5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு விரைவில் தடுப்பூசி

5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் நோய் நிலைமை மோசமடைந்து சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொவிட் வைரஸ் தொற்று காரணமாக நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக பொரளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை அறிவித்துள்ளது.

நாட்களில் கொவிட் தொற்றுக்கு சமனான வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்றன பரவி வருவதனால், பெற்றோர்கள் தமது குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர்