37,500 மெற்றிக் தொன் டீசலுக்கான கட்டணத்தை செலுத்திய இலங்கை

நான்கு நாட்களாக கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் இருந்த 37,500 மெற்றிக் தொன் டீசலுக்கு 35.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நேற்றிரவு செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

சிங்கப்பூர் நிறுவனமொன்றில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் சரக்குகள் கூடிய விரைவில் விடுவிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

ஆசிரியர்