சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் மீட்பு

கந்தானை, படகம வடக்குப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 500,000 ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

சோதனையின் போது சந்தேகநபரிடமிருந்து 6000 க்கும் மேற்பட்ட சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர் கந்தானை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சிகரட்டுகளும் சந்தேக நபரும் மேலதிக விசாரணைகளுக்காக கந்தானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்