2


எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்தல் எல்ல நீர் வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த வெளிநாட்டு பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 33 வயதான ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.