செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் | தானும் தூக்கிட்டு உயிரை மாய்ப்பு

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் | தானும் தூக்கிட்டு உயிரை மாய்ப்பு

0 minutes read

குருணாகலில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கொகரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணவிருகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் நேற்று முன்தினம் இரவு மனைவியை கொலை செய்ததுடன் வீட்டிற்கு அருகிலுள்ள பாழடைந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் 49 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் பன்கொல்ல, இப்பாகமுவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலங்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.