
பயங்கரவாத தடைச் சட்ட திருத்த சட்டமூலத்தின் சில பிரிவுகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.
அத்துடன் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை இன்றைய நடவடிக்கைகளுக்கான அதிகாரப்பூர்வ அறிக்கையில் அச்சிட உத்தரவிடுகின்றேன் என்றும் சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றம் இன்று காலை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய வேளையில் சபாநாயகர் அறிவிப்பின் போதே இதனை அவர் குறிப்பிட்டார்.