Wednesday, May 15, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்

பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்

1 minutes read

பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (26) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தமிழர் தேசத்தை அங்கீகரி,  எமது இனத்தை அழிக்க பெற்ற ஆயுதங்களுக்கு தமிழர்கள் பொறுப்பாளிகளா, அன்று ஆயுதத்தால் அழித்தாய் இன்று பட்டினியால் அழிக்கிறாய் தமிழர் தேசத்தை அங்கீகரித்தால் மட்டுமே புலம்பெயர் தமிழர்கள் முதலிடுவர் போன்ற கோசங்கள் எழுப்பபட்டது.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன்  ஆகியோரும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More