சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நிலந்த ஜயவர்தன மற்றும் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய நிலந்த ஜயவர்தனவிற்கு, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கான உதவி சேவையாளராக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கான உதவி சேவையாளர் பதவியில் இருந்த பிரியந்த வீரசூரியவிற்கு மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுச்சேவை ஆணைக்குழு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு செயலாளரின் அனுமதியில் பொலிஸ் மா அதிபரினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.