Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பெண்களுக்கான வலைப்பந்தாட்டப்போட்டிகளில் கிளி.முக்கொம்பன் வித்தியாலய அணி சம்பியனானது

பெண்களுக்கான வலைப்பந்தாட்டப்போட்டிகளில் கிளி.முக்கொம்பன் வித்தியாலய அணி சம்பியனானது

1 minutes read

கிளிநொச்சி பூநகரி கோட்ட பெருவிளையாட்டுப் போட்டிகளில் 16, 18, 20 வயதுப்பிரிவு பெண்களுக்கான வலைப்பந்தாட்டப்போட்டிகளில் கிளிநொச்சி முக்கொம்பன் மகா வித்தியாலய அணி சம்பியனானது.

பூநகரி மத்திய கல்லூரியில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் முதலில் இடம் பெற்ற 16 வயதுப் பிரிவு பெண்களுக்கான இறுதியாட்டத்தில் கிளிநொச்சி முக்கொம்பன் மகாவித்தியாலய அணியை எதிர்த்து கிளிநொச்சி ஞானிமடம் அ.த.க.பாடசாலை அணி மோதியது.

இதில் கிளிநொச்சி முக்கொம்பன் மகாவித்தியாலய அணி 8:2 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து இடம் பெற்ற 18 வயதுப்பிரிவு பெண்களுக்கான இறுதியாட்டத்தில் கிளிநொச்சி முக்கொம்பன் மகாவித்தியாலய அணியை எதிர்த்து குமுழமுனை அ.த.க. பாடசாலை அணிமோதியது.

இதில் கிளிநொச்சி முக்கொம்பன் மகாவித்தியாலய அணி 8:7 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றது.

மூன்றவதக இடம் பெற்ற 20 வயதுப்பிரிவு பெண்களுக்கான இறுதியாட்டத்தில் கிளிநொச்சி முக்கொம்பன் மகாவித்தியாலய அணியை எதிர்த்து, பூநகரி சிறிவிக்கினேஸ்வரா வித்தியாலயம் அணி மோதவிருத்தது.

இதில் பூநகரி சிறிவிக்கினேஸ்வரா வித்தியாலயம் அணி இறுதியாட்டத்திற்கு சமூகம் தராததினால் கிளிநொச்சி முக்கொம்பன் மகாவித்தியாலய அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More