Sunday, August 7, 2022

இதையும் படிங்க

புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்கள் சொல்வது கட்டுக்கதை என்கிறார் ஜி.எல்.பீரிஸ்

"இலங்கை இராணுவத்தினர் போர் விதிகளை மதித்தே நடந்தார்கள். புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்களின் கட்டுக்கதைகளை நம்பி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க...

தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என நான் நம்பவில்லை | சிவஞானம் கருத்து

தேசிய அரசாங்கம் அமைக்கப்படலாம் என்று தற்போது பேசப்பட்டு வருகின்றது, ஆனால் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என தான் நம்பவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், வடமாகாண சபையின் அவைத் தலைவருமான...

சர்வகட்சி குறித்து மகிந்த கருத்து!

சர்வகட்சி அரசாங்கத்தில் இணையும் அனைத்து தரப்பினரும் தாராள மனப்பான்மையுடன் தியாயம் செய்பவர்களாக செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாடசாலை நடத்தப்படும் நாட்களில் மாற்றம்

அடுத்த வாரம்(08 - 12) பாடசாலைகள் நடத்தும் நாட்களில் கல்வி அமைச்சு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.   இதன்படி, நாளை  முதல்(08) ஆரம்பமாகும்  புதிய வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும்...

சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களைப்பெற அரசியல் ஸ்திரத்தன்மையை நிரூபிக்க வேண்டும் | மைத்திரி

சர்வதேச நிறுவனங்கள் , அமைப்புக்களிடமிருந்து ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்கு வெகுவிரைவில் சர்வகட்சி...

கப்பல் விவகாரம் | இலங்கையின் வேண்டுகோள் குறித்து சீன அரசாங்கத்துடன் ஆராய்ந்த பின்னர் பதில் |  சீன தூதரகம்

சீனா கப்பலின் இலங்கை விஜயத்தை பிற்போடவேண்டும் என இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளிற்கு சீன அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னர் பதிலளிப்பதாக இலங்கைக்கான சீன...

ஆசிரியர்

அயோக்கியத்தனமான அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் | சஜித்

அயோக்கியத்தனமான , திருட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நாங்கள் துணைபோக மாட்டோம். மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

அதனால் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாத பாராளுமன்ற நடவடிக்கையை பகிஷ்கரித்து மக்களுடன் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபடுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்க்கையில்,

நாங்கள் பாராளுமன்றத்தை கூட்டி சபையை நடத்தும் இந்த நேரத்தில் நாட்டில் பேரவலங்கள் உருவாகியுள்ளன. தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு 220 இலட்சம் மக்களும் பெரும் துன்பத்தில் இருக்கின்றனர்.

மக்களின் பிரச்சினைகள் எதற்கும் எந்தத் தீர்வும் இல்லை. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், கேஸ் வரிசைகள் அவ்வாறே தொடர்கின்றன.

அரசாங்கம் மாறிய பின்னர் அந்த வரிசைகள் அதிகரித்துள்ளன. பிள்ளைகளுக்கு பால்மா இல்லை. மக்களுக்கு தொழில் இல்லை. தனியார் துறை தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன.

அரச சேவைகள் முடங்கியுள்ளன. அனைத்து தொழிற்துறையினரும் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. மக்களின் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் முன்வைக்கவில்லை.

மக்களின் பிரச்சினைகளை முன்வைக்கும் அரசாங்கமே இப்போது இருக்கின்றது. மக்களுக்கு இந்த துன்பங்களை தாங்கிக்கொள்ள முடியாது. இரண்டரை வருடங்களாக செயற்பட்ட தூர நோக்கு சிந்தனைகள் இல்லாத சர்வாதிகார ஆட்சியின் பிரதிபலன்களே இவை.

பாரிய மக்கள் ஆணையுடன் ஜனாதிபதி தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கம் அமைக்கப்பட்டது. சௌபாக்கிய நோக்கு இன்று மக்களுக்கு அசௌபாக்கிய நோக்காக மாறியுள்ளது. இன்று மக்களுக்கு உணவு இல்லை. வைத்தியசாலைகளில் மருந்துகளும் இல்லை.

சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து துறைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன, பாடசாலைகள் மூடப்பட்டு 42 இலட்சம் மாணவர்களும் நிர்க்கதியாகியுள்ளனர். மக்களின் கவலைகள் கஷ்டங்கள் தொடர்பில் எந்தவித இறக்கமும் காட்டாத அரசாங்கமே இப்போது உள்ளது. அதேபோன்று பாராளுமன்றமும் கதைகளை கூறும் இடமாக இந்த அரசாங்கம் மாற்றியுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி தனக்கு அழுத்தம் பிரயோகித்ததாக கோப் குழுவுக்கு வந்த மின்சார சபையின் தலைவர் கூறுகின்றார். இந்த நாட்டின் வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு காட்டிக்கொடுக்கவே அவ்வாறு செய்கின்றனர். இப்போது அந்த தலைவர் பதவி விலகியுள்ளார். ஆனால் எங்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன.

மேலும் மக்கள் வரிசைகளில் துன்பப்படும் போது எரிவாயுவில் அரசாங்கம் கொள்ளையடிக்கின்றது. டொலர்களை கப்பமாக பெற்றுக்கொள்கின்றனர். இந்நிலையில் இந்தியா வழங்கும் உதவிக்கு நன்றி தெரிவிக்கின்றோம். அவர்களின் கடன் திட்டத்தில் மருந்து கொண்டு வருவதிலும் சில குழுக்கள் கொள்ளையடிக்கின்றன. மாளிகைகளில் இருந்துகொண்டு அதனை செய்கின்றனர். அவர்கள் யார் என்பதனை பின்னர் கூறுகின்றோம்.

இந்த அரசாங்கத்திற்கு நாட்டு மக்களின் துன்பங்கள் தெரியவில்லையா? இதற்கு தீர்வு இல்லையா? இந்த அரசாங்கம் பாராளுமன்றத்தை கேவலப்படுத்தியுள்ளது. எங்களுக்கு வீதிகளில் இறங்க முடியும். கொள்கைகளை பின்பற்றுகின்றோம். நாங்கள் பதவிகளுக்காக எங்களின் சுய கௌரவத்தை காட்டிகொடுப்பவர்கள் அல்ல.

அயோக்கியத் தனமான , திருட்டு அரசாங்கமே இது, அமைச்சரவையில் தலைகளை மாற்றிக்கொண்டு பெரியவர்கள் சுகபோகம் அனுபவிக்கின்றனர். ஆனால் 220 இலட்சம் மக்களும் நிர்க்கதியாகியுள்ளனர். அவர்களின் குரல்களை இந்த சபையில் எழுப்ப முயற்சிக்கும் போது சிலர் கூச்சலிடுகின்றனர்.

நாங்கள் இப்போது பாராளுமன்ற கூட்டத்தை நடத்துவதன் ஊடாக 220 இலட்சம் மக்களுக்கும் கிடைக்கும் நன்மை என்ன? வாழ்க்கைச் செலவு வானை எட்டியுள்ளது. இது புரியவில்லையா?

இதனால் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியும் எதிர்க்கட்சியின் அனைத்து முன்னணி குழுக்களும் சில தீர்மானங்களை எடுத்துள்ளன. இந்த நாட்டு மக்களின் வலிகளை புரிந்துகொள்ளாத மக்களை ஏமாற்றும் அரசாங்கம் செய்யும் வேலைகளுடன் நாங்கள் தொடர்புபடாது இந்த வாரம் நாங்கள் பாராளுமன்றத்தை பகிஷ்கரிப்போம் என்பதனை கூறிக்கொள்கிறோம். நாங்கள் மக்களுடன் வீதிகளில் அமர்ந்துகொள்வோம். நாங்கள் அன்றும் இருந்தோம், நேற்றும் இருந்தோம் எதிர்காலத்திலும் மக்களுடன் இருப்போம் என்றார்.

இதையும் படிங்க

கிளிநொச்சி வரலாற்றில் இடம்பிடித்த கிளி மரதன்

கிளி பீப்பிள் ஒழுங்கமைப்பில் அபியகத்தின் கிளி மரதன் என்ற மரதன் நிகழ்வு இன்று கிளிநொச்சியின் பொக்கிசங்களில் ஒன்றாக திகழும் இரணைமடு நீர்ப்பாசன குள பிரதேசத்தில் தொடங்கி பரந்தன் வரை இடம்பெற்றது....

ஒன்பதாம் திகதி காத்திருக்கும் மாற்றங்கள் |வெற்றி பெறுவாரா ரணில்

வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார். அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று...

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு நாளை அறிவிக்கப்படும் | லிட்ரோ நிறுவனம்

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு நாளை திங்கட்கிழமை (8) மாலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். எரிவாயு தட்டுப்பாட்டிற்கு இம்மாதத்துடன் நிலையான...

பொய்க்கால் குதிரை | திரைவிமர்சனம்

கதைக்களம் ஒற்றை காலுடன் தன் குழந்தையைக் காப்பாற்ற போராடும் சாதாரண மனிதனின் கதை விமர்சனம்

ஹெலிகாப்டரில் தொங்கியபடி அதிகமுறை ‘புல்-அப்ஸ்’ எடுத்து கின்னஸ் சாதனை |  நெதர்லாந்து வாலிபர்கள் அசத்தல்

ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் 24 முறை புல்-அப்ஸ் எடுத்தார். அர்ஜென் ஆல்பரிசுக்கு பிறகு 2-வதாக ஸ்டான் பிரவுனி ஹெலிகாப்டரில் தொங்கியபடி புல்-அப்ஸ் எடுத்தார்.

போர் பதற்றத்தை தணிக்க சர்வதேச அளவில் ஆதரவு வழங்கவேண்டும் | தைவான் அதிபர் வலியுறுத்தல்

நான்சி பெலோசி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தைவான் எல்லை அருகே சீனா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. தைவானைச் சுற்றி 6 இடங்களில் சீனா...

தொடர்புச் செய்திகள்

பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா

விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம். ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்...

கிளிநொச்சி வரலாற்றில் இடம்பிடித்த கிளி மரதன்

கிளி பீப்பிள் ஒழுங்கமைப்பில் அபியகத்தின் கிளி மரதன் என்ற மரதன் நிகழ்வு இன்று கிளிநொச்சியின் பொக்கிசங்களில் ஒன்றாக திகழும் இரணைமடு நீர்ப்பாசன குள பிரதேசத்தில் தொடங்கி பரந்தன் வரை இடம்பெற்றது....

கற்றாழை கலந்தாலே

யோகர்ட் + Aloe Vera இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஹெலிகாப்டரில் தொங்கியபடி அதிகமுறை ‘புல்-அப்ஸ்’ எடுத்து கின்னஸ் சாதனை |  நெதர்லாந்து வாலிபர்கள் அசத்தல்

ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் 24 முறை புல்-அப்ஸ் எடுத்தார். அர்ஜென் ஆல்பரிசுக்கு பிறகு 2-வதாக ஸ்டான் பிரவுனி ஹெலிகாப்டரில் தொங்கியபடி புல்-அப்ஸ் எடுத்தார்.

போர் பதற்றத்தை தணிக்க சர்வதேச அளவில் ஆதரவு வழங்கவேண்டும் | தைவான் அதிபர் வலியுறுத்தல்

நான்சி பெலோசி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தைவான் எல்லை அருகே சீனா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. தைவானைச் சுற்றி 6 இடங்களில் சீனா...

புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்கள் சொல்வது கட்டுக்கதை என்கிறார் ஜி.எல்.பீரிஸ்

"இலங்கை இராணுவத்தினர் போர் விதிகளை மதித்தே நடந்தார்கள். புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்களின் கட்டுக்கதைகளை நம்பி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க...

மேலும் பதிவுகள்

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய் ஜூடின் சிந்துஜன் நியமனம்

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக ஊடகவியலாளர் சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 2021 தொடக்கம் 2026...

கிளிநொச்சி வரலாற்றில் இடம்பிடித்த கிளி மரதன்

கிளி பீப்பிள் ஒழுங்கமைப்பில் அபியகத்தின் கிளி மரதன் என்ற மரதன் நிகழ்வு இன்று கிளிநொச்சியின் பொக்கிசங்களில் ஒன்றாக திகழும் இரணைமடு நீர்ப்பாசன குள பிரதேசத்தில் தொடங்கி பரந்தன் வரை இடம்பெற்றது....

அடுத்த பிரம்மாண்ட படத்திற்காக பிரத்யேக பயிற்சி எடுத்து வரும் கமல்ஹாசன்

கமல்தமிழ்ல் சினிமாவின் டாப் நடிகரான கமல்ஹாசன் விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து எந்த திரைப்படத்தில் நடிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சர்வ கட்சியில் தீர்வு வேண்டும் | டக்ளஸ்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட காணிப் பிணக்குகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் சர்வ கட்சி...

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவைக் கைதுசெய்யுங்கள் | கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்

சிங்கப்பூரில் தங்கியிருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைதுசெய்யப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் கனேடிய பழமைவாதக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பியேர் பொய்லியேவ்ர், சமாதானம்...

சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம்

"சர்வகட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்தை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முழுமனதுடன் வரவேற்கின்றோம்" என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா

விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம். ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்...

கிளிநொச்சி வரலாற்றில் இடம்பிடித்த கிளி மரதன்

கிளி பீப்பிள் ஒழுங்கமைப்பில் அபியகத்தின் கிளி மரதன் என்ற மரதன் நிகழ்வு இன்று கிளிநொச்சியின் பொக்கிசங்களில் ஒன்றாக திகழும் இரணைமடு நீர்ப்பாசன குள பிரதேசத்தில் தொடங்கி பரந்தன் வரை இடம்பெற்றது....

கற்றாழை கலந்தாலே

யோகர்ட் + Aloe Vera இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி...

சிக்கன் பக்கோடா

தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம் முட்டை - 1

செம்பருத்தி மொய்ஸ்சுரைசர்

தேவையான பொருட்கள்: செம்பருத்திப்பூ தூள் - 2 தேக்கரண்டி ரோஜா பொடி - 1...

துயர் பகிர்வு