December 2, 2023 10:50 pm

யாழ்ப்பாணத்தில் முடங்கும் அபாயத்தில் பத்திரிகை நிறுவனங்கள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

யாழ்ப்பாணத்தில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகைகள் முடங்கும் அபாயம் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு 3 பத்திரிகைகள் அச்சு பதிப்பாக வெளிவருகின்றன.

எரிபொருள் தட்டுப்பாடு

யாழ்ப்பாணத்தில் முடங்கும் அபாயத்தில் பத்திரிகை நிறுவனங்கள்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறித்த பத்திரிகைகள் விநியோகத்தில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.

பத்திரிக்கை விநியோக பணியில் ஈடுபடும் பணியாளர்கள் எரிபொருள் இன்மையால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதால் விநியோக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் பத்திரிகைகள் முடக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

பத்திரிகை நிறுவனம்

யாழ்ப்பாணத்தில் முடங்கும் அபாயத்தில் பத்திரிகை நிறுவனங்கள்

இது தொடர்பில் பத்திரிக்கை நிறுவன தலைவர்கள், ஆசிரியர் பீடத்தினர் வடமாகாண ஆளூநர், மாவட்ட செயலர் ஆகியோருடன் கலந்துரையாடிய போதிலும் சாதகமான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முடங்கும் அபாயத்தில் பத்திரிகை நிறுவனங்கள்

அதேவேளை யாழில் மூன்று தொலைகாட்சி நிறுவனங்கள், வானொலி சேவைகள் என்பன உள்ளடங்கலாக 10 க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் உள்ளன.

அவற்றில் பணியாற்றும் ஊடக பணியாளர்கள் பலரும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்