சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு நாளை அறிவிக்கப்படும் | லிட்ரோ நிறுவனம்

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு நாளை திங்கட்கிழமை (8) மாலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

எரிவாயு தட்டுப்பாட்டிற்கு இம்மாதத்துடன் நிலையான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை எரிவாயு பயனாளர்களுக்கு மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

எரிவாயு விலைக்குறைப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உலக சந்தையில் விலைக்கமைய எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டது.

எரிவாயு விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த திறைசேரியுடனும், நிதியமைச்சுடனும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.

எரிவாயு விலைக்குறைப்பினை கடந்த 5 ஆம் திகதி அறிவிக்க எதிர்பார்த்திருந்தோம்.இருப்பினும் நிதியமைச்சுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையினை தொடர்ந்து குறிப்பிட்ட தினத்தில் விலை அதிகரிப்பை அறிவிக்க முடியவில்லை.சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு இன்று மாலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

லிட்ரோ நிறுவனம் கடந்த காலங்களை விட கடந்த ஜூலை மாதம் சிறிதளவு இலாபமடைந்துள்ளது.

நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ள கடனை கட்டம் கட்டமாக செலுத்தி, நிறுவனத்தின் இலாபத்தை பயனாளர்களுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளோம்.

எரிவாயு பற்றாக்குறை தற்போது கட்டம் கட்டமாக குறைவடைந்து வருகிறது. கடந்த மாதத்தில் மாத்திரம் சுமார் 27 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகித்துள்ளோம்.

இம்மாதத்திற்குள் எரிவாயு பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

ஆசிரியர்