May 28, 2023 5:12 pm

வசந்த முதலிகேவை உடனே ஆஜர்படுத்துக! – உயர் நீதிமன்றம் உத்தரவு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை உடனடியாக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், வசந்த முதலிகேவை கராப்பிட்டிய வைத்தியசாலையின் நீதி மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்துமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வசந்த முதலிகே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்