செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வியட்நாமில் இலங்கை அகதிகளில் இருவர் தற்கொலை முயற்சி

வியட்நாமில் இலங்கை அகதிகளில் இருவர் தற்கொலை முயற்சி

0 minutes read

வியட்நாமில் அகதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களில் இருவர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 303 பேர் சட்டவிரோதமாகக் கப்பல் மூலம் கனடா செல்ல முயன்ற போது, கப்பல் பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்தனர்.

அவர்களை ஜப்பானிய கப்பல் அதிகாரிகள் மீட்டு, வியட்நாமில் கரை சேர்த்துள்ளனர். இந்தநிலையில் அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டு இலங்கை அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.

அவர்கள் இருவரும் தற்போது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றார் என்று கூறப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.