செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் போதைப்பொருளுக்காக யுவதிகள் பாலியல் துர்நடத்தை!

யாழில் போதைப்பொருளுக்காக யுவதிகள் பாலியல் துர்நடத்தை!

0 minutes read

உயிர்கொல்லி போதைப்பொருள்களான ஹெரோய்ன் மற்றும் ஐஸ் என்பனவற்றைக் கொள்வனவு செய்வதற்காகப் பாலியல் துர்நடத்தையில் 23 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த காலங்களை விட உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை இளம் சமூகத்தினர் மத்தியில் அதிகரித்துள்ளது. சில தரப்புக்கள் இளம் பெண்களை இலக்கு வைத்தும் இதனை விநியோகித்து வந்துள்ளன. அவ்வாறு உயிர்கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையான இளம் பெண்கள், அவற்றைத் தொடர்ந்து கொள்வனவு செய்வதற்காகப் பாலியல் துர்நடத்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) ஏழு பெண்கள் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது.

“உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையை ஒழிக்கவேண்டும் என்பதுடன், இவ்வாறான கலாசாரப் பிறழ்வுகளை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும்” – என்று சமூகஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.