மலையகம் பற்றிய உலக அவதானத்தை முன்னெடுக்கும் நோக்கில், மனோ கணேசன் எம்.பி. தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி குழுவினரை, நுவரெலியாவுக்குப் பயணம் செய்துள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையிலான குழுவினர் இன்று சந்தித்துள்ளனர்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி குழுவில் மனோ கணேசனுடன் வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி., எம். உதயகுமார் எம்.பி., எம். பரணீதரன், ஆர், ராஜாராம், விஸ்வநாதன் ஆகியோரும், அமெரிக்கத் தூதுவர் குழுவில் ஜூலி சங்குடன் அரசியல்துறைப் பொறுப்பாளர் ரூபி, யூ.எஸ்.எயிட். துணைப் பணிப்பாளர் டிம் ஆகியோரும் பங்கேற்றனர்.