செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருமலையில் ‘முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி’ வழங்கல்!

திருமலையில் ‘முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி’ வழங்கல்!

0 minutes read

‘முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி’ வழங்கல் நிகழ்வு இன்று திருகோணமலை சிவன் கோயிலடிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்களையும் இணைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் ‘முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி’ வழங்கல் நிகழ்வு தமிழர் தலைநகரில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை சிவன் கோயிலடிப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு இன்று காலை சென்ற பல்கலைக்கழக மாணவர்கள், கஞ்சிக்கான அரிசி மற்றும் விறகைப் பெற்று சிவன் கோயிலடி முன்றலில் ‘முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி’யை ஆக்கினர்.

தொடர்ச்சியாக இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து பொதுமக்களுக்கு ‘முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி’ வழங்கப்படுகின்றது என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.