செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காணாமல்போன யுவதி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

காணாமல்போன யுவதி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

0 minutes read

இரண்டு நாட்களாகக் காணாமல்போயிருந்த இளம் யுவதி ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் மாத்தளை – ரத்தோட்டையில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 28 ஆம் திகதி வீட்டிலிருந்து காணாமல்போயிருந்த குறித்த யுவதியை அவரின் குடும்பத்தினர் தேடி வந்திருந்த நிலையில், நேற்று (30) மாலை வீட்டுக்கு அருகிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி பெற்றோருடன் முரண்பட்டிருந்த நிலையிலேயே வீடடிருந்து காணாமல்போயிருந்தார் எனவும், அதன் காரணமாக அவர் காணாமல்போயிருந்த தகவலைப் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், யுவதி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எனினும், யுவதியின் சடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.