October 4, 2023 4:49 am

புங்குடுதீவில் கசிப்பு அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்து சாவு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

யாழ்ப்பாணத்தில் கசிப்பு அருந்திய இளைஞர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

புங்குடுதீவுப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நிறை போதையில் இருந்த இளைஞர் திடீரென இரத்த வாந்தி எடுத்துள்ளார். அவரை உறவினர்கள் வைத்தியசாலையில் சேர்த்த நிலையில், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கசிப்பு அருந்திய நிலையிலையே நிறை போதையில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை, புங்குடுதீவுப் பகுதியில் கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்துள்ளன எனவும், கசிப்பு உள்ளிட்டவை வன்னிப் பிரதேசங்களில் இருந்து அங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன எனவும், அவ்வாறு கசிப்பைக் கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டும் தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்