செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

1 minutes read

மாதாந்தம் இடம்பெறும் எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைய நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு லீற்றருக்கு ரூ.15 வால் குறைக்கப்பட்டுள்ளது.

லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் புதிய விலை 318 ரூபாவாகும்.

லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 இன் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையின் 95 ஒக்டேன் யூரோ 4 லீற்றர் பெற்றோலின் புதிய விலை 385 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றரின் புதிய விலை 340 ரூபாவாகும்.

இந்தநிலையில், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 245 ரூபாவாகும். இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் (Industrial Kerosene) ஒரு லீற்றர் 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 270 ரூபாவாகும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், லங்கா IOC நிறுவனம் CEYPETCO எரிபொருட்களின் விலைக்குறைப்புக்கு ஏற்ற வகையில் தனது விலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.