செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை குருந்தூர்மலை சம்பவம்: வெட்கித்தலைகுனிய வேண்டும்! – நீதி அமைச்சர் சீற்றம்

குருந்தூர்மலை சம்பவம்: வெட்கித்தலைகுனிய வேண்டும்! – நீதி அமைச்சர் சீற்றம்

1 minutes read

“நீதித்துறைக்குச் சவால் விடும் வகையிலும் குருந்தூர்மலையைச் சிலர் பயன்படுத்த முற்படுகின்றனர். இது நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல்.”

– இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

குருந்தூர்மலையில் நேற்றுமுன்தினம் வழிபடச் சென்ற தமிழ் மக்கள், பிக்குகள் – சிங்கள மக்கள் – பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டமை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இது வெட்கித்தலைகுனிய வேண்டிய செயற்பாடு. இந்தப் பிரச்சினைக்குப் பின்னால் இருக்கும் குழுவை அடையாளம் காணவேண்டும். அந்தக் குழுதான் தமிழ் மக்களையும் – பௌத்த சிங்கள மக்களையும் முட்டிமோதவிட்டு வேடிக்கை பார்க்க எண்ணுகின்றது. இந்தப் பிரச்சினைக்கு விரைந்து ஒரு தீர்வு எட்டப்படவேண்டும் என்பதில் நீதி அமைச்சர் என்ற ரீதியில் நான் உறுதியாகவுள்ளேன்.

அதேவேளையில் நீதித்துறைக்குச் சவால்விடும் வகையிலும் குருந்தூர்மலையை சிலர் பயன்படுத்த முற்படுகின்றனர். இது நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல். அனைத்துக்கும் விரைந்து இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.