செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடமராட்சி வல்லிபுர ஆழ்வாருக்கு இன்று தேர்த்திருவிழா!

வடமராட்சி வல்லிபுர ஆழ்வாருக்கு இன்று தேர்த்திருவிழா!

0 minutes read

யாழ். வடமராட்சி, துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று (28) இடம்பெறும்.

கடந்த 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவத்தில் இன்று அதிகாலை வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று வல்லிபுரப் பெருமான் காலை 8 .45 மணியளவில் தேரில் ஆரோகணித்து வலம் வருவார்.

நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குச் சமுத்திரத் தீர்த்தமும், மறுநாள் சனிக்கிழமை கேணித் தீர்த்தமும் இடம்பெறும்.

ஆலயத்துக்கான போக்குவரத்து ஒழுங்குகள் வழமைபோல் இடம்பெறும் எனவும், அடியார்கள் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதைத் தவிர்க்குமாறும் ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.