செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் வீடொன்றுக்குத் தீ வைப்பு!

கிளிநொச்சியில் வீடொன்றுக்குத் தீ வைப்பு!

0 minutes read

கிளிநொச்சி, இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் மற்றைய வீட்டுக்குத் தீ வைத்துள்ளனர்.

நேற்று இரவு இடம்பெற்ற வாய்த்தர்க்கம் காரணமாக இன்று அதிகாலை குறித்த வீட்டில் யாரும் இல்லாத வேளை தீ வைக்கப்பட்டுள்ளது.

வீட்டின் கண்காணிப்பு கமராக்களை உடைத்துவிட்டு வீட்டின் கதவுகளையும் உடைத்துத் தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் வீட்டில் இருந்த தொலைக்காட்சி, மின் இணைப்புக்கள் மற்றும் மின்விசிறி என 80 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இதையடுத்து அயலவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த இராமநாதபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.