ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று உறுதியேற்றார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்குச் சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போதே அவர் எம்.பியாக அவர் சத்தியப்பிரமாணம் செய்தார்.
அமைச்சர் நசீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வறிதானதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.