செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உண்மையை மறைப்பதும் குற்றமே! – மைத்திரியை எச்சரிக்கும் மஹிந்த

உண்மையை மறைப்பதும் குற்றமே! – மைத்திரியை எச்சரிக்கும் மஹிந்த

1 minutes read
“நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்காமல் தெரிந்த உண்மையை மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்த வேண்டும். உண்மையை மறைப்பதும் ஒருவகையில் குற்றமாகும்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கேள்வி:- முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் உண்மைச் சூத்திரதாரியைத் தாம் அறிந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். உங்களின் நிலைப்பாடு என்ன ?

பதில்: அவரது கருத்து பாரதூரமானது. குண்டுத் தாக்குதல் தொடர்பில் அவருக்கு ஏதும் தெரிந்திருந்தால் அதனை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும். நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. உண்மை தெரிந்திருந்தும் அதனை மறைப்பதும் குற்றமாகக் கருதப்படும்.

கேள்வி:- பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

பதில்:- அவசரபப்ட வேண்டியதில்லை. உரிய நேரத்தில் எமது தீர்மானத்தை அறிவிப்போம்.

கேள்வி:- ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினைக்குரியதாக உள்ளதாலா பொதுத்தேர்தலைக் கேட்கின்றீர்கள்?

பதில்:- அவ்வாறில்லை. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் அரசியல் கட்சிதான் பொதுத்தேர்தலிலும் வெற்றி பெறும். சகல தரப்புக்கும் சம அந்தஸ்து கிடைக்கப்பெற வேண்டுமாயின் பொதுத்தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும்.

கேள்வி:- கோப் குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புகள் வெளிப்பட்டுள்ளனவே?

பதில்:- ரோஹித அபேகுணவர்தன மக்கள் பிரதிநிதி. ஆகவே, அவர் கோப் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளிநபரைத் தலைவராக நியமிக்கவில்லை.

கேள்வி:- இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேசியத் தேர்தல்கள் சவால்மிக்கதே?

பதில்:- ஆம். இந்தச் சவால்களைக் காட்டிலும் பாரிய சவால்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். தற்போதைய சவால்களையும் சிறந்த முறையில் வெற்றிக்கொள்வோம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.