செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மதுபானம் எனக் கருதி விஷத் திரவத்தைப் பருகிய 6 மீனவர்களில் இதுவரை ஐவர் மரணம்!

மதுபானம் எனக் கருதி விஷத் திரவத்தைப் பருகிய 6 மீனவர்களில் இதுவரை ஐவர் மரணம்!

0 minutes read

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த விஷத் திரவத்தை மதுபானம் எனக் கருதி அருந்தியதையடுத்து சுகவீனமடைந்த நிலையில் உயிரிழந்தனர் எனக் கூறப்படும் மீனவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

அதேநேரம் குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது என்று  தெரிவிக்கப்படுகின்றது.

தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 4 ஆம் திகதி கடலுக்குச் சென்றிருந்த 6 மீனவர்களே சுமார் 380 கடல்மைல் தொலைவில் நேற்றுமுன்தினம் குறித்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.