செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம்” யாழில் போராட்டம்

“இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம்” யாழில் போராட்டம்

1 minutes read

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம். இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என கோரி வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து  வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது.

உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே போராட்டம் நடைபெற்றது.

இதேவேளை சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.