சீனாவின் ஜனாதிபதி க்சி ஜின்பிங், வடகொரியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது என்று ஜப்பானிய ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வடகொரியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதிக்கும், வடகொரிய தலைவருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று விரைவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து எதிர்வரும் ஜுன் மாதத்துக்குப் பின்னர் சீன ஜனாதிபதி வடகொரியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எது எவ்வாறு இருந்தாலும் சரி வடகொரியாவின் பயத்தில் பெரும் நாடுகள் சந்திப்பை மேட்கொள்ளவுள்ளது என ஊடகங்கள் பல்வேறு கருத்துக்களை பதிவுசெய்து வருகிறது.
