செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா புளோரன்ஸ் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

புளோரன்ஸ் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

0 minutes read

 

அமெரிக்காவின் புளோரன்ஸ் புயல் மற்றும் அதனால் உண்டான வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், புளோரன்ஸ் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் தொகை 9 ஆக உயர்வடைந்துள்ளது. அதன்படி வடக்கு கரோலினாவின் டப்பிளன் கவுண்டியில் மூன்று பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் வடக்கு கரோலினாவில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அத்துடன் தெற்கு கரோலினாவில் புயலில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புயல் தாக்கிய வடக்கு கரோலினாவில் பல்லாயிரம் பேர் அவசர உதவி மையங்களில் தங்கியுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 17 இலட்சம் பேர் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 8 இலட்சம் பேர் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர்.

அத்துடன் மீட்பு படையினரும், கடற்படையினரும் தொடர்ந்தும் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.