செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா அ.தி.மு.க. நிலை விரைவில் மாறும்: சசிகலா அறிக்கை!

அ.தி.மு.க. நிலை விரைவில் மாறும்: சசிகலா அறிக்கை!

1 minutes read

அரசியல் எதிரிகளின் குழ்ச்சிகளுக்கு இரையாகாமல் அ.தி.மு.க.வையும் அதன் தொண்டர்களையும் காப்பதே தமது முதல் கடமை. இந்த கொள்கையை மனதில் கொண்டுதான் தனது வாழ்க்கை பயணம் இந்த நொடியிலும் சென்று கொண்டிருக்கிறது.

தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அ.தி.மு.க. பயன்பட்டதில் இருந்து அதன் மதிப்பு குறைந்தது. மேலும் தன் தொண்டர்களையும் அக்கட்சி மறந்தது. இதனால் ஏளன பேச்சுகளும் சிறுமைப்படுத்துவதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. ஒதுக்கப்பட்டவர்கள், தாங்களாக ஒதுங்கி கொண்டு செயல்படாமல் இருப்பவர்கள் அனைவரும் கவலைப்படாமல் சிறிது காலம் பொறுத்திருங்கள். விரைவில் அ.தி.மு.க. நிலை மாறும். தலை நிமிரும். இது உறுதி.

ஒரு சிலருடைய தேவைகளுக்காகவும் விருப்பு வெறுப்புகளுக்காகவும் தற்போது அ.தி.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதை சரி செய்து, மீண்டும் தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும், அரசியல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் வெளிப்படும் வகையில் விரைவில் அ.தி.மு.க.வை மாற்றிக் காட்டுவோம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.