இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும், முன்னாள் இந்திய அணித் தலைவருமான சவுரவ் கங்குலி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
கொவிட்-19க்கு சாதகமாக சோதனை செய்த பின்னர், கங்குலி நகர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
கங்குலிக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் முன்னதாக வழங்கப்பட்டுள்ளது.
49 வயதான கங்குலி இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு முறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் மற்றும் சில இதய பிரச்சினைகள் காரணமாக அவசர ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டார்.