செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் கறி மிளகாய் தூள் தயாரிக்கும் முறை

கறி மிளகாய் தூள் தயாரிக்கும் முறை

2 minutes read

1 1/2 கி.கிராம் தூள் கிடைக்கும் 

தேவையான பொருட்கள் 

  1. செத்தல் மிளகாய் – 500 கிராம் 
  2. மல்லி – 400 – 500 கிராம் 
  3. பெருஞ்சீரகம் – 100 கிராம் 
  4. மிளகு – 50 கிராம் 
  5. சிறிதாக வெட்டிய மஞ்சள் – 25 கிராம் 
  6. கடுகு – 1 மே. க. ( நிரப்பி )
  7. வெந்தயம் – 1 மே. க . ( நிரப்பி )
  8. நற்சீரகம் – 2 மே . க ( நிரப்பி ) 
  9. இறைச்சி சரக்கு – 2 பக்கட் ( சிறியது )
  10. கறிவேப்பிலை – 10 நெட்டு 

செய்முறை :-

  • மிளாகாய் , மல்லி , பெருஞ்சீரகம் ஆகியவற்றை துப்பரவு செய்து தனி தனியாக கழுவி காய வைத்து எடுத்துக் கொள்க . 
  • மிளகாயின் காம்பை நீக்கிவிட்டு  சிறு சிறு துண்டுகளாக வெட்டி கையால் நன்கு கசக்கி கொண்டபின் , மிளகாய் விதைகள் வேறாகவும் , மிளகாய் தோல் வேறாகவும் பிரித்து எடுத்துக் கொள்க . ( விதைகளை வேறாக எடுக்கா விடல் வறுக்கும்போது கருகிவிடும் ) 
  • பின்பு தாச்சியை அடுப்பில் வைத்து சூடானதும் மல்லியை இட்டு வறுக்கவும் . மல்லி சரியாக வறுக்கபட்டிருப்பின் விரல்களின் இடையே வைத்து நசுக்கி பார்க்கும் போது தூளாக உதிரும் பருவத்தில் மல்லியை எடுத்துக் கொள்க .மீண்டும் தாய்ச்சியில் பெருஞ்சீரகத்தை போட்டு வறுத்து , விரல்கள் இடையே வைத்து நசிக்கும் போது உதிரும் பருவத்தில் எடுத்துக் கொள்க . 
  • மீண்டும் தாய்ச்சியில் நற்சீரகம் , மிளகு , வெந்தயம் , கடுகு , இறைச்சி சரக்கு , மஞ்சள் . கச்சான் முத்து , கறிவேப்பிலை என்பவற்றை போட்டு வறுத்துக் கறிவேப்பிலை முறுகிய பதத்தில் எடுத்துக் கொள்க  
  • இவ் வண்ணமே மிளகாய் விதைகளைத் தனியாக பொன் நிறமாக  வறுத்தெடுத்துக் கொள்க . மிளகாய்த் தோலை தனியாக நன்றாக சூடாகும்வரை  வறுத்தெடுத்து  கொள்க . 
  • பின்பு வறுத்த மல்லி , பெருஞ்சீரகம் , மிளகு , வெந்தயம் , கடுகு , இறைச்சி சரக்கு , மஞ்சள் , கச்சான் முத்து , கறிவேப்பிலை , மிளகாய் விதை , மிளகாய் தோல்  என்பவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து திரித்தெடுத்து  நன்றாக ஆற வைத்து அரித்தெடுத்துக் கொள்க . 
  • காற்று புகாத ஜாடியில் அடைத்து வைத்துப் பயன்படுத்தலாம் .

குறிப்பு :-

விரும்பினால் ஒரு பிடி உழுந்து , அரிசி , கடலைப் பருப்பு , கச்சான் முத்து  என்பவற்றை வறுத்து சேர்த்துக் கொள்ளலாம் .

யாழ் சமையல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More