0
யாழ்ப்பாணம், கொக்குவில் கிழக்கு பகுதியில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
50 கிராம் கஞ்சா கலந்த மாவாவை உடைமையில் வைத்திருந்தார்கள் என்ற அடிப்படையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.