கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிராய் குளத்தை அண்டிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர், இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பூநகரி, செம்பங்குன்று பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய கந்தசாமி பிரணவன் எனும் இளைஞரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.