செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழக அரசியலில் பரபரப்பு: முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து அவதூறு – உதயநிதி ஸ்டாலின் கைது!

தமிழக அரசியலில் பரபரப்பு: முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து அவதூறு – உதயநிதி ஸ்டாலின் கைது!

1 minutes read

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மூத்த தலைவருமான உதயநிதி ஸ்டாலின், முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாகப் பேசிய முறைப்பாட்டின் அடிப்படையில் இன்று (04) காலை கைது செய்யப்பட்டார். சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தஞ்சாவூரில் நேற்று (03) காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக வெற்றி கழக அரசுக்கு எதிராக திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் மற்றும் அவரது அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதேநிகழ்வில் நடிகை த்ரிஷாவைக் குறிவைத்து சர்ச்சைக்குரிய முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக தவெக தரப்பிலும், தேசிய மகளிர் ஆணையத்திலும் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இன்று காலை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டின் முன்பு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். திமுக நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் விசாரணைக்காகத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

கைது செய்யப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் பின்வருமாறு கூறினார்:

தான் காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் விவசாயிகளை அரசு எப்படி ஏமாற்றுகிறது என்பது குறித்து 22 நிமிடங்கள் பேசியதாகத் தெரிவித்தார்.

மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் திசைதிருப்பவே “ரீல்ஸ் வெறி” முற்றிய நிலையில் இருக்கும் இந்த அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

“நான் பேசாத ஒன்றை பேசியதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து, பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன், சட்டப்படிச் சந்திப்பேன்” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.