செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் மணமும் சுவையும் நிறைந்த இலங்கை பாணி மீன் கறி!

மணமும் சுவையும் நிறைந்த இலங்கை பாணி மீன் கறி!

1 minutes read

சாதத்துடன் சூடாக பரிமாறப்படும் காரமான மீன் கறி என்றாலே பலருக்கும் மிகவும் பிடிக்கும். தேங்காய்ப்பால் இல்லாமலேயே மசாலாவின் மணத்துடன், புளிப்பும் காரமும் கலந்த சுவையான மீன் கறியை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம்.

சாதம், இடியப்பம், தோசை, ரொட்டி என பல உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு ஏற்ற இந்த சுவையான மீன் கறியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மீன் – 500 கிராம்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
ரம்பை – சிறிய துண்டு
மிளகாய்த்தூள் – 1½ தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
மிளகுத்தூள் – ½ தேக்கரண்டி
சீரகத்தூள் – ½ தேக்கரண்டி
வெந்தயம் – ¼ தேக்கரண்டி
இலங்கை வறுத்த கறித்தூள் – 1 தேக்கரண்டி
புளி – சிறிய எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு

மீன் கறி செய்வது எப்படி?

முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து, சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து மெதுவாகப் பிசைந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் ரம்பையை சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வெங்காயம் சிறிது பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதனுடன் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக குழையும்வரை வதக்கவும்.

அடுத்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் கறித்தூளை சேர்த்து குறைந்த தீயில் நன்றாகக் கிளறவும்.

புளியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அந்த புளித்தண்ணீரை மசாலாவுடன் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு நன்றாக கொதிக்கத் தொடங்கியதும், ஊறவைத்த மீன் துண்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக சேர்க்கவும்.

பாத்திரத்தை மூடி மிதமான தீயில் சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் வேகவிடவும். மீன் வெந்ததும் பாத்திரத்தை மெதுவாக குலுக்கி குழம்பை கலக்கவும். கரண்டியால் அதிகமாகக் கிளறினால் மீன் துண்டுகள் உடைந்து விடக்கூடும்.

இறுதியாக குழம்பு சிறிது கெட்டியாகி எண்ணெய் மேலே மிதக்கத் தொடங்கியதும் அடுப்பை அணைக்கவும்.

சுவையான மீன் கறி தயார்!

காரமும் புளிப்பும் கலந்த மணமிக்க மீன் கறியை சூடான சாதத்துடன் பரிமாறினால் சுவை அசத்தலாக இருக்கும். அடுத்த நாள் இந்தக் கறியின் சுவை இன்னும் அதிகமாக இருக்கும் என்பதும் இதன் சிறப்பு.

குறிப்பு: மீன் கறிக்கு சுறா, பாரை, கெளுத்தி, கானாங்கெளுத்தி போன்ற உங்களுக்கு பிடித்த மீன்களைப் பயன்படுத்தலாம். காரத்தின் அளவை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.