செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி

தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி

1 minutes read

தமிழகத்தில் மதுராந்தகம் ( தனி) – தாராபுரம் ( தனி) ஆகிய இரண்டு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் இந்த இரண்டு தொகுதியையும் தமிழக வெற்றி கழகம் – அதிமுகவிடமிருந்து கைப்பற்றி இருக்கிறது.

மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல்- தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 19,967 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி வாகை சூடி இருக்கிறார்.

தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா- தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 9,471 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்று இருக்கிறார்.

மதுராந்தகம் –

தமிழக வெற்றி கழகம் – 70,748

திமுக – 50,781

அதிமுக- 45,333

நாம் தமிழர் கட்சி – 1,772

சிபிஐ(எம்) -1,370

 

தாராபுரம் –

தமிழக வெற்றி கழகம் – 66 841

திமுக – 57, 370

அதிமுக – 45,280

நாம் தமிழர் கட்சி – 5,268

சிபிஐ – 1,157

இதனைத் தொடர்ந்து தமிழகத்தை ஆளும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்திருக்கிறது. அத்துடன் விஜய் அரசிற்கு ஆதரவு அளித்து வரும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்திருக்கிறது.

தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 37.2 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கிறது. திமுகவிற்கு 31.7சதவீத வாக்குகளும் , அதிமுகவிற்கு 25.1சதவீத வாக்குகளும் கிடைத்திருக்கிறது.

மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்திற்கு 36.7 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கிறது. இத்தொகுதியில் திமுகவிற்கு 26.3% வாக்குகளும், அதிமுகவிற்கு 23.4 சதவீத வாக்குகளும் கிடைத்திருக்கிறது.

இடைத்தேர்தல் முடிவுகளின் மூலம் தமிழக மக்கள் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசிற்கு தங்களது ஆதரவை ஜனநாயக முறைப்படி தெரிவித்துள்ளனர்.

இந்த தேர்தலில் எந்த கட்சியினரும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசின் சிறப்பான செயல்பாட்டிற்கு இடைத்தேர்தல் முடிவு சிறந்த எடுத்துக்காட்டு’ என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.