செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் விமல் நடிக்கும் ‘நவோரியா’ படத்தின் ப்ரோமோ சாங் வெளியீடு

நடிகர் விமல் நடிக்கும் ‘நவோரியா’ படத்தின் ப்ரோமோ சாங் வெளியீடு

1 minutes read

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விமல் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘நவோரியா’ எனும் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படத்தினை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் விளம்பர பாடல் ஒன்றை படக்குழு பிரத்யேக காணொளியுடன் வெளியிட்டுள்ளது.

கேலிச்சித்திர கலைஞரான இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நவோரியா’ திரைப்படத்தில் விமல், ஆன் ஷீத்தல், தம்பி ராமையா, ஆரி அர்ஜுனன், பால சரவணன், நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல், அப்புகுட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘மெலோடி சாம்ராட்’ டி. இமான் இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி வித் கொமடி திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிபிசி ட்ரிம் ஹவுஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் பிரத்யேக பாடல் ஒன்றையும்… அதற்குரிய காணொளியையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘அத்திரி பித்திரி அத்திரி பத்திரி சோனு பத்திரி சோனு பத்திரி…’ என தொடங்கும்   அந்த பாடலை பாடலாசிரியர் ரோகேஷ் எழுத, பின்னணி பாடகர் புருஷோத்தமன் பழனி – இசையமைப்பாளரும், பாடகருமான டி. இமான் மற்றும் பின்னணி பாடகி பிரியங்கா தேஷ் பாண்டே ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள். இந்தப் பாடல் துள்ளல் இசை பாணியில் அமைந்திருப்பதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.