பூமியில்
பிறந்து வாழ்ந்து
அல்லல்பட்டு,
யார் யாருக்காகவோ வாழ்ந்து,
யார் யாருக்கோ கைத்தடியாகி,
எனக்காக வாழ்ந்தேனா என்பது தெரியாமல் வாழ்ந்து,
நொந்து-
என்னிடம் தரப்பட்ட கைத்தடியுடன்
கட்டிலில் வீழ்ந்து
நைந்து போய்
‘ஈழம் இன்றோ,நாலையோ’
முணுமுணுக்கும்
உறவுகளின் மெதுவான பேச்சும்
காதுள் இறங்க..
ஏதோ ஒரு பொழுதில்
கல்விச் சாலியில்,கோயிலில்,
பயணிக்கும் வண்டிகளில்,
கைகுலுக்கி-
வாருங்கள்
என்றழைக்கும் போதுகளில்
உரசிப்போன,
மனதை
வருடிப்போன…
பெண்களை
நினைக்காமல்
இந்த வாழ்வும் கடந்து போகாது
இடுகாடு நோக்கி…
– முல்லை அமுதன் –