செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நான்கு மாதங்களில் 48 தலை துண்டிப்பு!

நான்கு மாதங்களில் 48 தலை துண்டிப்பு!

0 minutes read

கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு மற்றும் போதை பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கே மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது சவுதி அரேபியா அரசாங்கம்.

சவுதி அரேபியாவில், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 48 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிரசேதம் செய்யப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிக அளவிலான மரண தண்டனை வழங்கப்படுவது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் 600க்கும் மேற்பட்டவர்களின் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

அதேவேளை, சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் ‘டைம்;’ சஞ்சிகைக்கு செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். கொலை தவிர்ந்த ஏனைய குற்றச்செயல்களுக்காக வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.