தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தொழிலாளர் தினக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடப்பெற்றது. வடக்கின் கிளிநொச்சியிலும் தமிழ்த தேசியக் கூட்டமைப்பு தொழிலாளர் தின பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தியது.
இந்த கூட்டங்களிலும் தமிழீழ விடுதலை புலிகளின் எழுச்சி பாடல்களுடன் மே தின நிகழ்வு இடப்பெற்றது குறிப்பிடத்தக்கவிடயம்.
யாழ்ப்பாணத்தில் நடத்தும் பிரதான சர்வதேச தொழிலாளர் தினக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 27 யோசனைகள் அடங்கிய பிரகடனமொன்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசியல் தீர்வு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு, மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை முதலான யோசனைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தொழில்வாய்ப்பு, போராளிகள் ஜனநாயக நீரோட்டத்தின் இணைப்பு, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், பெண்களின் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பளிக்கப்படுதல் எனபனவும் இதில் உள்ளடக்கப்ட்டுள்ளன.
அத்துடன், தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தல், வங்கிக் கடன்களை இரத்துச் செய்தல் வடக்குக் கிழக்கிற்கு இணைந்த கட்டுமானமும் மேற்பார்வையும் மற்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பது என்பன உள்ளிட்ட 27 யோசனைகளை இந்தப் பிரகடனம் கொண்டுள்ளது.
