விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் ஒருதொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு இளங்கோபுரம் காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளால் வெடிபொருட்கள் புதைத்துவைத்துள்ளதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் தகவலையடுத்து இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் சிறப்பு அதிரடிப்படையினருக்கு தெரியப்படுத்தியுள்ளதையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அதனை மீட்டு தகர்த்து அழிக்கும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 737 மோட்டார் குண்டுகள்> ஒருதொகை கைக்குண்டுகள் கனரக துப்பாக்கி ரவைகள் மற்றும் ஆர்.பி.ஜி துப்பாக்கி செலுத்திகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
