செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா டொனால்டு டிரம்ப் – கிம் ஜோங்-உன் நேரடிப் பேச்சுவார்த்தை: ஜூன் 12ல்  நடக்கும்!

டொனால்டு டிரம்ப் – கிம் ஜோங்-உன் நேரடிப் பேச்சுவார்த்தை: ஜூன் 12ல்  நடக்கும்!

1 minutes read


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன் முதல் முறையாக சந்திக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாடு சிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி நடக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

சில மாதங்கள் முன்பு வரை கடுமையான சொற்போரில் ஈடுபட்டு வந்த இரண்டு நாடுகளின் தலைவர்களும், அடுத்தடுத்து எதிர்பாராத விதமாக நடந்த நேர்மறையான நிகழ்வுகள், மற்றும் ராஜீய முயற்சிகளின் விளைவாக தற்போது பேச்சுவார்த்தை வரை வந்துள்ளார்கள்.

கடந்த மார்ச் 9-ம் தேதி முதல் முறையாக, கிம் விடுத்த நேரடிப் பேச்சுக்கான அழைப்பை ஏற்று உலகை அதிர வைத்தார் டிரம்ப்.

சமீப வாரங்களில் இரண்டாவது முறையாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ புதன்கிழமை வடகொரியா சென்று திரும்பினார். அவரது பயணத்தின்போது வடகொரியாவின் சிறையில் இருந்த மூன்று அமெரிக்கக் குடிமக்களை அந்நாடு நல்லெண்ண நடவடிக்கையாக விடுவித்தது. அவர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்பினர். அப்போது டிவிட்டர் மூலம் கருத்துத் தெரிவித்த டிரம்ப், கிம்- பாம்பியோ இடையே நடந்த சந்திப்பு நல்லவிதமாக இருந்ததாகவும், உச்சி மாநாட்டுக்கான தேதியும், இடமும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் அடுத்த நாளே டிரம்ப்-கிம் சந்திப்புக்கான தேதியும், இடமும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் இருந்து விடுவிக்கப்பட்ட அந்த மூன்று பேரும் அமெரிக்கா வந்தடைந்த சில மணி நேரங்களில் இந்தத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியா-வுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் நிலவி வந்த பதற்றம் அடிப்படையான சிக்கலாக இருந்த நிலையில், வட கொரியா – தென் கொரியா உறவில் பதற்றம் தனியத் தொடங்கியது. பகைமை பாராட்டிவந்த இரண்டு சகோதர நாடுகளும் கூட்டாக ஒரே கொடியின் கீழ் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்றன. கிம் ஜோங்-உன்னின் சகோதரி தென்கொரியா சென்று வந்தார். அமெரிக்கா சென்ற தென் கொரிய அதிகாரிகள் முதலில் கிம் விடுத்த நேரடிப் பேச்சுக்கான அழைப்பை டிரம்ப் ஏற்றுக்கொண்டதை உறுதி செய்தனர். பிறகு இதை உறுதி செய்து டிரம்ப் டிவீட் செய்தார்.

(BBC இணையத்தளம் தெரிவித்துள்ளது)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.