செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இந்தோனேஷியாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் நாசம்!

இந்தோனேஷியாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் நாசம்!

0 minutes read

 

இந்தோனேஷியாவின் பெரிய நகரான சுரபாயவில் உள்ள மூன்று பிரதான கிறிஸ்தவ தேவாலயங்கள் குண்டு தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன.

தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது பேர் ஸ்தலத்திலேயே பலியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த மூன்று தாக்குதல்களும் ஒருசில நிமிட இடைவெளியில் தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாடு ஊடகங்கள் தெரிவிக்கிறது.

இந்த தாக்குதல்களுக்கு எவரும் உரிமை கோரவில்லை.
தாக்கப்பட்ட தேவாலயங்களில் ஒன்றின் படங்கள் தொலைகாட்சியில் உடனடியாக காட்டப்பட்டது. அந்த தேவாலயத்தின் பிரதான வாசல் இடிபாடுகளினால் மூடப்பட்டிருந்த நிலையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.