செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் இடம்பெறும் விசித்திர கொலைகள்!

இலங்கையில் இடம்பெறும் விசித்திர கொலைகள்!

0 minutes read

மனைவியின் தாக்குதலில் கணவன் உயிரிழந்த சம்பவம்
ஒன்று அரநாயக்க, தெபத்கம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தங்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக மனைவி மீது எசிட் வீச முற்பட்ட போது அந்த எசிட் அவரின் உடலில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கூரிய ஆயுதத்தால் கணவன் மீது மனைவி தாக்குதல் நடத்தியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வந்த பொலிஸார் படுகாயமடைந்திருந்த கணவனை, திப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரநாயக்க, தெபத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அரநாயக்க பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.