யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலர் மடம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
இன்று சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.கேபிள் இணைப்பிலிருந்து பரவிய மின்சாரத்தால் தாக்கப்பட்ட தந்தையைக் காப்பாற்ற மகன் முற்பட்டுள்ளார்.
இதன்போது இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இருவரையும் காப்பாற்ற முற்பட்ட மற்றுமொருவர் மின்சார தாக்கத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
58 வயதான மயில்வாகனம் ஜெகநாதனும் அவரின் மகனான 32 வயதுடைய ஜெகநாதன் சஞ்ஜீவனும் உயிரிழந்துள்ளனர்.
