செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தூத்துக்குடி மக்களிற்கு நீதி கோரி ஈழத்தில் ஆரப்பாட்டம்.

தூத்துக்குடி மக்களிற்கு நீதி கோரி ஈழத்தில் ஆரப்பாட்டம்.

1 minutes read

 

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தமிழகப் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர். இதனைக் கண்டித்தே ஈழ நல்லூரில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது
மேலும் 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மகஜர் ஒன்று யாழில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரிளிடம் கையளிக்கப்பட்டது.

இந்திய தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்ட மக்களின் சூழலியல் நீதிக்கான (ஸ்டெர்லைட் ஆலை மூடல்) போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது பொலிஸ் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடி பிரயோகத்தினை கண்டித்தும் அதன்போது உயிரிழந்த தமிழ் மக்களுக்கு நீதி கோரியும் இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் ஆலைய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டது.

“மோடி அரசே தமிழகத்திலா உன் சூட்டுப் பயிற்சி, சுடாதே சுடாதே தமிழர்களைச் சுடாதே, அடிக்காதே அடிக்காதே தமிழர்களை அடிக்காதே, சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா?, இந்திய அரதேச ஆலை அவசியமானதோ – தமிழனின் உயிர் அவசியமானதோ?, தமிழக ஆட்சியில் தமிழன் என்ன பலி ஆட்டுக் கூட்டமா? உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறு நூற்றுக் கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வடகிழக்க்கு மக்கள் சமூக ஆர்வலர்கள் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.