செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ‘மாவா’ என்ற போதைப் பொருட்கள் பாடசாலை மாணவர்களின் கையில்!

‘மாவா’ என்ற போதைப் பொருட்கள் பாடசாலை மாணவர்களின் கையில்!

1 minutes read

 

யுத்தத்தின் பின்னர் போதைப் பொருட்கள் பாவனைகள் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது அதுவும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் சென்றடைவது மிக வேகமாவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ‘மாவா’ என்ற பெயரில் போதைப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளதாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மாவா தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் புகையிலை மற்றும் வாசனைத் திரவியங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகரொருவர் தன்மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு நேற்று 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

மேலும், யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் மாவா விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் விளக்கமறியல் காலம், எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை தலா 2 கிலோ மாவாவுடன் கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.