யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கைதடி பகுதியில் 4 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டத்துடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைதடி பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போதே 4 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பற்றுள்ளது.
புத்தளம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், குறித்த சந்தேக நபரை சாவகச்சேரி நிதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
